Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ குப்பையில் வீசப்பட்ட 'தமிழ் வாழ்க' பலகை

குப்பையில் வீசப்பட்ட 'தமிழ் வாழ்க' பலகை

குப்பையில் வீசப்பட்ட 'தமிழ் வாழ்க' பலகை

குப்பையில் வீசப்பட்ட 'தமிழ் வாழ்க' பலகை

ADDED : அக் 08, 2025 12:52 AM


Google News
Latest Tamil News
சிங்கம்புணரி; சிங்கம்புணரி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இருந்த 'தமிழ் வாழ்க' மின்னொளி பலகை குப்பையில் வீசப்பட்ட சம்பவம் தமிழ் ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி மன்ற கட்டடங்களில் 'தமிழ் வாழ்க' என்று மின்னொளி பலகை அமைக்கப்படும் என்று தமிழக சட்டசபையில் 2010 ஏப். 26 ஆம் தேதி அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகங்கள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, அனைத்து அலுவலக கட்டடங்களிலும் ஒளிரும் எழுத்துக்களை கொண்ட 'தமிழ் வாழ்க' பலகை அமைக்கப்பட்டு, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நிறைவு நாளான அதே ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

சிங்கம்புணரியில் பழைய ஒன்றிய அலுவலக கட்டடம் 2023 ல் இடிக்கப்பட்டபோது அதிலிருந்த பெயர் பலகை சிமென்ட் அகற்றப்பட்டு சிமென்ட் கோடவுன் அருகில் வீசப்பட்டது. இது குறித்து தமிழ் ஆர்வலர்கள் பலரும் முறையிட்டதை தொடர்ந்து புதிய அலுவலக கட்டடம் கட்டியதும் பொருத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் புதிய அலுவலக கட்டடம் கட்டி ஒரு வருடத்தை கடந்தும் இந்த பெயர் பலகை இன்னும் பொருத்தப்படவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us