ADDED : பிப் 01, 2024 11:20 PM

காரைக்குடி, - காரைக்குடியில் பயணிகளுடன் சென்ற அரசு டவுன் பஸ், வீட்டின் காம்பவுண்ட் சுவரில் மோதியது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
காரைக்குடியில் இருந்து சாத்தம்பத்திக்கு அரசு டவுன் பஸ் சென்று வருகிறது. கல்லுப்பட்டி, விசாலையன்கோட்டை வழியாக செல்லும் இந்த டவுன் பஸ் நேற்று காரைக்குடியில் இருந்து புறப்பட்டு சாத்தம்பதிக்கு சென்றது. டிரைவர் சோலை மணிகண்டன் பஸ்சை ஒட்டி வந்தார். செஞ்சை பள்ளிவாசல் அருகே பஸ் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த டவுன் பஸ் அங்கிருந்த ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர்.


