/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மானாமதுரை அரசு கல்லுாரியில் மூன்றாம் கட்ட கவுன்சிலிங் மானாமதுரை அரசு கல்லுாரியில் மூன்றாம் கட்ட கவுன்சிலிங்
மானாமதுரை அரசு கல்லுாரியில் மூன்றாம் கட்ட கவுன்சிலிங்
மானாமதுரை அரசு கல்லுாரியில் மூன்றாம் கட்ட கவுன்சிலிங்
மானாமதுரை அரசு கல்லுாரியில் மூன்றாம் கட்ட கவுன்சிலிங்
ADDED : ஜூன் 12, 2025 02:03 AM
மானாமதுரை: மானாமதுரை அரசு கல்லுாரியில் மூன்றாம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஜூன் 16 அன்று நடைபெறும் என முதல்வர் கோவிந்தன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, மானாமதுரை அருகே செய்களத்துாரில் அரசு கல்லுாரி துவக்கப்பட்டுள்ளது. பி.காம்., பி.ஏ., அரசியல் அறிவியல், வரலாறு, பொருளியல், பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடப்பிரிவுகளுக்கு மூன்றாம் கட்ட கவுன்சிலிங் ஜூன் 16 அன்று காலை 9:00 மணிக்கு கல்லுாரியில் நடைபெறும்.
இதில் பங்கேற்கும் மாணவர்கள் விண்ணப்ப படிவ நகல், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, 2 மதிப்பெண், மாற்று, ஜாதி, சிறப்பு ஒதுக்கீடு சான்றுகள், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார், 6 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழியில் படித்ததற்கான சான்றுகளுடன் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம், என்றார்.