/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புவனம் வாரச்சந்தையில் எரியாத விளக்கால் அவதி திருப்புவனம் வாரச்சந்தையில் எரியாத விளக்கால் அவதி
திருப்புவனம் வாரச்சந்தையில் எரியாத விளக்கால் அவதி
திருப்புவனம் வாரச்சந்தையில் எரியாத விளக்கால் அவதி
திருப்புவனம் வாரச்சந்தையில் எரியாத விளக்கால் அவதி
ADDED : அக் 02, 2025 04:02 AM
திருப்புவனம் : திருப்புவனம் வாரச்சந்தையில் மின் விளக்குகள் எரியாததால் வியாபாரிகள், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
திருப்புவனத்தில் வாரம்தோறும் செவ்வாய் கிழமை காய்கறி சந்தையும், புதன் கிழமை மாட்டுச்சந்தையும் நடந்து வருகிறது. சந்தை நாட்களில் 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை அமைத்து பொருட்கள் விற்பனை செய்வார்கள். காலை பத்து மணிக்கு தொடங்கி இரவு பத்து மணி வரை சந்தை செயல்படும். கூலி வேலைக்கு செல்பவர்கள் மாலையில் வீடுதிரும்பிய பின் இரவில்தான் பொருட்கள் வாங்க வருவார்கள், சந்தையில் உள்ள மின் விளக்குகள் எரியாததால் இருட்டில் மிகுந்த தவிப்பிற்குள்ளாகின்றனர்.
விளக்குகள் எரியாததை பயன்படுத்தி மக்களிடம் பணம் , நகை ஆகியவற்றை பறித்து சென்று விடுகின்றனர். அடிப்படை தேவைகளான குடிநீர், மின் விளக்கு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


