/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ டிரைவர் கொலையில் மேலும் இருவர் கைது டிரைவர் கொலையில் மேலும் இருவர் கைது
டிரைவர் கொலையில் மேலும் இருவர் கைது
டிரைவர் கொலையில் மேலும் இருவர் கைது
டிரைவர் கொலையில் மேலும் இருவர் கைது
ADDED : மே 26, 2025 02:30 AM
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சீனமங்கலம் கார் உரிமையாளர் மற்றும் டிரைவர் வள்ளியப்பன் 43. இவர், அதே ஊரை சேர்ந்த கட்டட தொழிலாளி அர்ச்சுணன் 25, என்பவரின் காதல் விஷயத்தை கிராமத்தில் உள்ள அனைவரிடமும் கூறியுள்ளார்.
இந்த ஆத்திரத்தில் இருந்த அர்ச்சுணன், அவரது நண்பர்கள் நேற்று முன்தினம் இரவு வள்ளியப்பனை மறித்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளனர். இதில் அர்ச்சுணனை திருவேகம்புத்துார் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் இக்கொலையில் தொடர்புடைய கட்டட தொழிலாளிகளான மச்சக்காளை மகன் ஆனந்த் 30, பெரியகருப்பன் மகன் பூமி 26, ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், இரண்டு டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.