ADDED : பிப் 02, 2024 06:00 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையினரால் கோழிக் கழிச்சல் தடுப்பூசி முகாம் பிப்.14 வரை மாவட்டத்திலுள்ள 2 கால்நடை மருத்துவமனை, 79 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 47 கால்நடை கிளை நிலையங்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படவுள்ளது.
எனவே புறக்கடை கோழிகளுக்கு கழிச்சல் நோய் ஏற்பட்டு இறப்புகளை தவிர்த்திடும் பொருட்டு சிறப்பு முகாம்களின் வாயிலாக பொது மக்கள் தாங்கள் வளர்க்கும் கோழிகளுக்கு, இலவசமாக தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.


