ADDED : அக் 02, 2025 11:37 PM

சிவகங்கை ; சிவகங்கை கோகுலேஹால் தெருவில் உள்ள சிருங்கேரி சாரதா பீடம், சங்கரமடத்தில் நவராத்திரியை முன்னிட்டு லட்சார்ச்சனை, சுமங்கலி, கன்னிகா பூஜைகள் நடந்தது.
நவராத்திரியை முன்னிட்டு செப்.,22 முதல் அக்., 1 வரை லலிதா சகஸ்ரநாமம், லட்சார்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது. நேற்று விஜயதசமியை முன்னிட்டு மடத்தில் கணபதி, லலிதா, துர்கா ேஹாமங்கள் நடந்தது.
அதனை தொடர்ந்து சுமங்கலி, கன்னிகா பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு யாகம் நடத்தி பூர்ணாகுதி, தீபாராதனை நடத்தினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


