ADDED : அக் 07, 2025 03:57 AM
சிவகங்கை: சிவகங்கையில் டாஸ்மாக் மது பாரில் அழகுபாண்டி, திவான் பாபுவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், அழகுபாண்டி கத்தியால் குத்தியதில் திவான்பாபு காயமுற்றார்.
சிவகங்கை மதுரை முக்கு பகுதி பாண்டியன் மகன் திவான்பாபு 40. இவர் தன் நண்பர் களுடன் ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள டாஸ்மாக் மது பாரில் மது அருந்தியுள்ளார்.
அங்கு டி.புதுார் அழகர்சாமி மகன் அழகுபாண்டி 27யும் நண்பர்களுடன் மது அருந்த வந்திருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், அழகு பாண்டி மறைத்து வைத்திருந்த கத்தியால், திவான்பாபுவை குத்தினார்.
இதில், அவரது மார்பு, தோள்பட்டை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மதுரை தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.
சிவகங்கை இன்ஸ்பெக்டர் அன்னராஜ், அழகுபாண்டியை கைதுசெய்தார்.


