/உள்ளூர் செய்திகள்/தென்காசி/ மதமாற்ற பிரசாரம் செய்தவர்கள் வெளியேற்றம் மதமாற்ற பிரசாரம் செய்தவர்கள் வெளியேற்றம்
மதமாற்ற பிரசாரம் செய்தவர்கள் வெளியேற்றம்
மதமாற்ற பிரசாரம் செய்தவர்கள் வெளியேற்றம்
மதமாற்ற பிரசாரம் செய்தவர்கள் வெளியேற்றம்
ADDED : செப் 11, 2025 11:31 PM
தென்காசி:தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர், குழந்தைகளுடன் புளியங்குடி பகுதியில் வந்து, கிறிஸ்துவ மதம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி ஜெபத்திற்கு அழைத்துள்ளனர்.
அங்கு திரண்ட பா.ஜ., மற்றும் ஹிந்துமுன்னணியினர், “எங்கள் பகுதியில் மதமாற்றம் செய்ய எப்படி வரலாம்” எனக் கேட்டு வாக்குவாதம் செய்தனர். புளியங்குடி போலீசார் இருதரப்பினரையும் சமரசம் செய்து, துண்டு பிரசுரங்களை வழங்கியவர்களை எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பினர்.