ADDED : செப் 26, 2025 03:10 AM

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று பகலில் பெய்த பலத்த மழையால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நீர்வரத்து குறைந்ததால் இரவில் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.