/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ ரேஸ் போன 2 தனியார் பஸ்கள் டிரைவர்கள், கண்டக்டர்கள் கைது; உரிமம் ரத்து ரேஸ் போன 2 தனியார் பஸ்கள் டிரைவர்கள், கண்டக்டர்கள் கைது; உரிமம் ரத்து
ரேஸ் போன 2 தனியார் பஸ்கள் டிரைவர்கள், கண்டக்டர்கள் கைது; உரிமம் ரத்து
ரேஸ் போன 2 தனியார் பஸ்கள் டிரைவர்கள், கண்டக்டர்கள் கைது; உரிமம் ரத்து
ரேஸ் போன 2 தனியார் பஸ்கள் டிரைவர்கள், கண்டக்டர்கள் கைது; உரிமம் ரத்து
ADDED : ஜூலை 05, 2024 09:51 PM

தஞ்சாவூர்:தஞ்சாவூரில் கும்பகோணம் செல்லும் தனியார் பஸ்கள் நாள்தோறும், போட்டி போட்டு இயக்குவது என்பது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் யாரும் கண்டுகொள்வது இல்லை.
இந்நிலையில், தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் நோக்கி டி.வி.எம்., மற்றும் செந்தில் என்ற இரண்டு தனியார் பஸ்கள் நேற்று முன்தினம் போட்டி போட்டுக் கொண்டு, படுவேகமாக சென்று கொண்டிருந்தன.
அப்போது, அம்மாப்பேட்டை வளைவில், அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, அந்த இரண்டு தனியார் பஸ்களும், அரசு பஸ்சை முந்திச் சென்று கொண்டிருந்தன. அப்போது எதிரே கும்பகோணத்தில் இருந்து வந்த கார், இந்த தனியார் பஸ்களின் படுவேகமான போக்கைப் பார்த்து, அப்படியே சாலையில் நின்று விட்டது.
இதனால், அதிர்ஷ்டவசமாக, அதில் வந்தவர்கள் உயிர் தப்பினர். கார் மீது இரண்டு தனியார் பஸ்களும் மோத இருந்ததை அறிந்த பயணியர் அலறி கூச்சலிட்டனர்.
இது தொடர்பான வீடியோ, நேற்று வேகமாக பரவியது. சம்பந்தப்பட்ட ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்தனர்.
அதையடுத்து, கும்பகோணம் தாலுகா போலீசார், இரண்டு தனியார் பஸ்களை பறிமுதல் செய்தனர். 'செந்தில்' பஸ் டிரைவரான ராஜேஷ்கண்ணன், 42, கண்டக்டர் சுதாகர், 42, டி.வி.எம்., பஸ் டிரைவர் ராஜ்குமார், 39, கண்டக்டர் ராஜதுரை, 36, ஆகியோரை கைது செய்து, நால்வரின் உரிமங்களையும் ரத்து செய்து, விசாரித்து வருகின்றனர்.