/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ தவறவிட்ட மோதிரத்தை ஒப்படைத்த பணியாளர்கள் தவறவிட்ட மோதிரத்தை ஒப்படைத்த பணியாளர்கள்
தவறவிட்ட மோதிரத்தை ஒப்படைத்த பணியாளர்கள்
தவறவிட்ட மோதிரத்தை ஒப்படைத்த பணியாளர்கள்
தவறவிட்ட மோதிரத்தை ஒப்படைத்த பணியாளர்கள்
ADDED : ஜூலை 06, 2024 07:27 PM

தஞ்சாவூர்:தஞ்சாவூர், கீழராஜவீதி பகுதியை சேர்ந்தவர் ரவிகுமார், 37. இவர், நேற்று காலை தன் வீட்டில் சேர்ந்த குப்பையை கீழ ராஜவீதி அரண்மனை அருகில் உள்ள குப்பை தொட்டியில் கொட்டிஉள்ளார்.
பின் வீட்டிற்கு சென்று பார்த்த போது, கையில் அணிந்திருந்த 6 கிராம் தங்க மோதிரத்தை காணவில்லை என்பதை உணர்ந்து, அக்கம் பக்கத்தில் தேடினார்.
அப்போது, குப்பை தொட்டியில் மோதிரம் விழுந்திருக்கலாம் என்பதால், தன் வார்டு கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி உதவியை நாடினார்.
அவர் கொடுத்த தகவல் படி, துப்புரவு ஆய்வாளர் எபின் சுரேஷ் மற்றும் மாநகராட்சி துாய்மை பணியாளர்கள், ரவிகுமார் தவறவிட்ட மோதிரத்தை அரைமணி நேரத்திற்கும் மேலாக தேடி கண்டுபிடித்துக் கொடுத்தனர்.