ADDED : ஜூன் 13, 2025 02:39 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஜோதிடர் கொடியரசன், 24, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கொடியரசன் சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.
சிறுமி தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார்.குழந்தை பாதுகாப்பு நல அலுவலர் ஞானம் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். கொடியரசனை போக்சோவில், நேற்று போலீசார் கைது செய்தனர்.