/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ தேரோட்டத்தில் மயங்கிய பி.எஸ்.எப்., வீரர் மரணம் தேரோட்டத்தில் மயங்கிய பி.எஸ்.எப்., வீரர் மரணம்
தேரோட்டத்தில் மயங்கிய பி.எஸ்.எப்., வீரர் மரணம்
தேரோட்டத்தில் மயங்கிய பி.எஸ்.எப்., வீரர் மரணம்
தேரோட்டத்தில் மயங்கிய பி.எஸ்.எப்., வீரர் மரணம்
ADDED : ஜூன் 09, 2025 06:51 AM

தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு யானைக்கால் தெருவை சேர்ந்த ரமேஷ், 57; குஜராத் மாநிலத்தில் 84வது பட்டாலியனில் பி.எஸ்.எப்., வீரராக பணியாற்றி வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த ரமேஷ், ஒரத்தநாட்டில் உள்ள விசாலாட்சியம்மன் சமேத காசி விஸ்வநாதர் கோவில் வைகாசி விசாக தேரோட்டத்தில் நேற்று பங்கேற்று வழி நடத்தினார்.
கோமுட்டி தெரு பகுதியில் தேருடன் சென்று கொண்டிருந்த ரமேஷ் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள், ரமேஷை ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்த விட்டதாக தெரிவித்தனர். வெயில் தாக்கத்தால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறினர்.
ரமேஷுக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.