/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ பாலம் சுவரில் லாரி மோதி இருவர் பலி: டிரைவர் காயம் பாலம் சுவரில் லாரி மோதி இருவர் பலி: டிரைவர் காயம்
பாலம் சுவரில் லாரி மோதி இருவர் பலி: டிரைவர் காயம்
பாலம் சுவரில் லாரி மோதி இருவர் பலி: டிரைவர் காயம்
பாலம் சுவரில் லாரி மோதி இருவர் பலி: டிரைவர் காயம்
ADDED : ஜூன் 03, 2025 07:16 AM
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பூதலுாரை சேர்ந்தவர் காளிராஜ், 26. பிள்ளையார்பட்டி ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் அருண்குமார், 22. மருங்குளத்தை சேர்ந்தவர் சதீஷ்கண்ணன், 40. மூவரும், நேற்று முன்தினம் மாலை, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இருந்து பிராய்லர் கோழிகளை லாரியில் ஏற்றிக்கொண்டு, தஞ்சாவூரில் உள்ள இறைச்சி கடைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வந்தனர். லாரியை சதீஷ் கண்ணன் ஓட்டினார்.
நேற்று அதிகாலை, தஞ்சாவூர்- -- பட்டுக்கோட்டை பைபாஸ் சாலையில், லாரி திடீரென பால சுவரில் மோதியது. இதில், டிரைவருடன் அமர்ந்திருந்த காளிராஜ், அருண்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தனர். சதீஷ்கண்ணன் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து தஞ்சாவூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.