/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ மைத்துனரை கழுத்தை நெரித்து கொலை செய்த மாமா கைது மைத்துனரை கழுத்தை நெரித்து கொலை செய்த மாமா கைது
மைத்துனரை கழுத்தை நெரித்து கொலை செய்த மாமா கைது
மைத்துனரை கழுத்தை நெரித்து கொலை செய்த மாமா கைது
மைத்துனரை கழுத்தை நெரித்து கொலை செய்த மாமா கைது
ADDED : அக் 24, 2025 03:42 AM
தஞ்சாவூர்: திருவையாறு அருகே மைத்துனரை கழுத்தை நெரித்து கொலை செய்த மாமாவை, போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே வரகூர் வயலாடியை சேர்ந்தவர் சின்னதம்பி, 56; செங்கல் சூளை தொழிலாளி. இவரது மனைவி ராணி . இவர்களுக்கு, நான்கு மகன்கள் உள்ளனர்.
சின்ன தம்பி, ராணியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால், இருவரும் மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். ராணியின் சகோதரரான புதுக்கோட்டை மாவட்டம், காட்டு நாவல் துலுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் நடராஜன், 45. இவர் அதே பகுதியில், மற்றொரு செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார்.
ராணி, நடராஜன் வசிக்கும் பகுதியில் வசித்ததால், சின்னதம்பி, நடராஜனிடம் ராணியை வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு பலமுறை கூறியுள்ளார். அதற்கு, நடராஜன் முறையாக பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.
இதில், ஆத்திரமடைந்த சின்னதம்பி, நேற்றுமுன்தினம் தேவன்குடிக்கு, நடராஜனை பைக்கில் அழைத்து வந்து, கழுத்தை துண்டால் நெரித்து கொலை செய்தார். நடராஜன் மகன் மகேந்திரன் புகாரின்படி, சின்னதம்பியை கபிஸ்தலம் போலீசார் நேற்று நள்ளிரவு கைது செய்தனர்.


