Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேசிய நெடுஞ்சாலைத்துறை கம்பமெட்டு ரோட்டை கையகப்படுத்த வேண்டும் ஏல விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தல்

தேசிய நெடுஞ்சாலைத்துறை கம்பமெட்டு ரோட்டை கையகப்படுத்த வேண்டும் ஏல விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தல்

தேசிய நெடுஞ்சாலைத்துறை கம்பமெட்டு ரோட்டை கையகப்படுத்த வேண்டும் ஏல விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தல்

தேசிய நெடுஞ்சாலைத்துறை கம்பமெட்டு ரோட்டை கையகப்படுத்த வேண்டும் ஏல விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தல்

ADDED : ஆக 05, 2024 07:31 AM


Google News
கம்பம் : 'கம்பமெட்டு ரோட்டை தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்த வேண்டும்.' என, ஏல விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு செல்ல போடிமெட்டு, கம்பமெட்டு, குமுளி ரோடுகள் உள்ளன. இரு மாநில இணைப்பு ரோடுகள் தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பது விதி.

இதில் போடிமெட்டு மற்றும் குமுளி ரோடுகள் தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் தரமாக பராமரிக்கப்படுகிறது. ஆனால் கம்பமெட்டு ரோடு இன்னமும் மாநில நெடுஞ்சாலைத்துறை வசம் உள்ளது.

கம்பத்திலிருந்து குமுளி வழியாக கேரளா செல்ல 20 கி.மீ. பயணம் செய்ய வேண்டும். கம்பமெட்டு வழியாக 13 கி.மீ. பயணம் செய்தால் கேரளாவிறகு விரைவாக செல்லலாம். ஏழு கி.மீ.,துாரம் குறைவால் கம்பமெட்டு ரோட்டின் வழியாக அதிக போக்குவரத்து நடைபெறுகிறது. தினமும் ஏலத்தோட்டங்களுக்கு செல்ல நூற்றுக்கணக்கான ஜீப்புகளில் தொழிலாளர்களும், விவசாயிகளும் இந்த ரோட்டின் வழியாக செல்கின்றனர். சபரிமலை சீசனில் ஒருவழிப்பாதையாக பயன்படுத்தப்படுகிறது. போடிமெட்டு ரோட்டில் பிரச்னை என்றால், மூணாறு செல்ல இந்த ரோடு பயன்படுகிறது. செங்குத்தான அபாயகரமான வளைவுகளை கொண்ட குறுகலான இந்த ரோட்டை அகலப்படுத்த ஏல விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு அகலப்படுத்த வேண்டும் என்றால் அது தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு எளிதாகும். தற்போது கம்பமெட்டு ரோடு 5.5 மீட்டர் முதல் 7 மீட்டர் வரை அகலம் உள்ளது. கம்பத்திலிருந்து 13 கி.மீ., தூரமுள்ள இந்த ரோட்டில் மலைப்பாதை மட்டும் 8 கி.மீ., தூரம் உள்ளது. இரண்டு வழிப் பாதையாக இந்த ரோட்டை மாற்றி, அகலப்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்த வேண்டும் என்று ஏல விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us