/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேனியில் பகலில் எரியும் தெருவிளக்குகள் தேனியில் பகலில் எரியும் தெருவிளக்குகள்
தேனியில் பகலில் எரியும் தெருவிளக்குகள்
தேனியில் பகலில் எரியும் தெருவிளக்குகள்
தேனியில் பகலில் எரியும் தெருவிளக்குகள்
ADDED : ஜூலை 13, 2024 05:17 AM

தேனி, : தேனி நகராட்சி மெத்தனத்தால் 6 வார்டில் 15க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் பலிலும் எரிவதால் மின்சாரம், நிதி விரயம் ஏற்படுகிறது.
இந்நகராட்சியின் 6வது வார்டில் வீரப்ப அய்யனார் கோயில் ரோடு, பஜார் தெரு, முத்துபாலி தெரு, பாலி தெரு, இளங்கோ தெருக்கள் உள்ளன. இதில் உள்ள 15க்கும் மேற்பட்ட மின்கம்பங்களில் தெருவிளக்குகள் இரவில் எரிகின்றன. கடந்த ஒரு வாரமாக பகலிலும் தெருவிளக்குகள் தொடர்ந்து எரிகிறது. இந்த தெருவிளக்குகளை தினமும் காலையில் வீரப்ப அய்யனார் கோயில் ரோட்டில் உள்ள மின்கம்பத்தில் உள்ள சுவிட்ச்சை ஆப் செய்ய வேண்டும். ஆனால் ஊழியர்களின் மெத்தனத்தால் ஆப் செய்யாததால் பகலிலும் தெருவிளக்குகள் எரிகின்றன. இதனால் நகராட்சி நிதி விரயமாகிறது என பொது மக்கள் புகார் கூறுகின்றனர். நகராட்சி பொறியியல் பிரிவு தெருவிளக்குள் விசயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.