/உள்ளூர் செய்திகள்/தேனி/ ரூ.16 கோடி கட்டுமான பணிகளில் பொறியாளர்கள் குழு ஆய்வு அவசியம்; மருத்துவமனை கட்டுமானத்தில் தரத்தை உறுதிப்படுத்துங்க ரூ.16 கோடி கட்டுமான பணிகளில் பொறியாளர்கள் குழு ஆய்வு அவசியம்; மருத்துவமனை கட்டுமானத்தில் தரத்தை உறுதிப்படுத்துங்க
ரூ.16 கோடி கட்டுமான பணிகளில் பொறியாளர்கள் குழு ஆய்வு அவசியம்; மருத்துவமனை கட்டுமானத்தில் தரத்தை உறுதிப்படுத்துங்க
ரூ.16 கோடி கட்டுமான பணிகளில் பொறியாளர்கள் குழு ஆய்வு அவசியம்; மருத்துவமனை கட்டுமானத்தில் தரத்தை உறுதிப்படுத்துங்க
ரூ.16 கோடி கட்டுமான பணிகளில் பொறியாளர்கள் குழு ஆய்வு அவசியம்; மருத்துவமனை கட்டுமானத்தில் தரத்தை உறுதிப்படுத்துங்க
ADDED : ஜூலை 16, 2024 03:58 AM
கம்பம் : பெரியகுளம், உத்தமபாளையம் அரசு மருத்துவமனைகளில் ரூ.16 கோடியில் கட்டப்பட்டு வரும் விபத்து அவசர சிகிச்சை பிரிவு கட்டடங்கள் கட்டுமானங்களில் பொதுப்பணித்துறை ஆய்வு செய்து தரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வாகன பெருக்கம், இருவழிச் சாலைகளில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் தினம் தினம் விபத்துகள் நடந்து வருகிறது. பைபாஸ் சாலைகள் பயன்பாட்டிற்கு வந்த பின் விபத்துகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சையளிக்க அவசர சிகிச்சை பிரிவு தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே உள்ளது. மாவட்டத்தில் உள்ள போடி, பெரியகுளம், ஆண்டிபட்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் என எந்த அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சையளிக்க அந்த வசதி இல்லாத நிலை உள்ளது.
அந்த குறையை போக்க கடந்தாண்டு தேனி மாவட்டத்தில் பெரியகுளம் மாவட்ட தலைமை மருத்துவமனை, உத்தமபாளையம் அரசு மருத்துவமனைகளில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்த அரசு அனுமதி வழங்கியது.
பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் ரூ.12 கோடியிலும், உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.4 கோடியிலும் விபத்து அவசர சிகிச்சை பிரிவு கட்டடங்கள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கம்பத்தில் ரூ.10 கோடியில் கட்டப்பட்டு வரும் பிரசவ மேம்பாட்டு கட்டடம் சிலாப் இடிந்து விழுந்து தொழிலாளி ஒருவர் பலியானார். மருத்துவமனையில் நடந்த கட்டுமானத்தில் பொதுப்பணித்துறை முறையான கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே உத்தமபாளையம், பெரியகுளம் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை பொதுப்பணித் துறையின் கட்டட பிரிவு பொறியாளர்கள் குழு ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.