/உள்ளூர் செய்திகள்/தேனி/ செயற்கை நிறமி கலந்து அப்பளம் விற்ற இருவருக்கு ஒரு நாள் சிறை தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பு செயற்கை நிறமி கலந்து அப்பளம் விற்ற இருவருக்கு ஒரு நாள் சிறை தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பு
செயற்கை நிறமி கலந்து அப்பளம் விற்ற இருவருக்கு ஒரு நாள் சிறை தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பு
செயற்கை நிறமி கலந்து அப்பளம் விற்ற இருவருக்கு ஒரு நாள் சிறை தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பு
செயற்கை நிறமி கலந்து அப்பளம் விற்ற இருவருக்கு ஒரு நாள் சிறை தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பு
ADDED : ஜூன் 06, 2024 04:16 AM
தேனி, : தேனியில் அப்பளம், வடகத்தில் செயற்கை நிறமூட்டி கலந்து உடலுக்கு தீங்கிழைக்கும் வகையில் தயாரித்த தயாரிப்பாளர், விற்பனையாளருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதத்துடன் ஒருநாள் நீதிமன்ற காவல் தண்டனை வழங்கி மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்து நிறைவேற்றப்பட்டது.
தேனி ரைஸ்மில் தெரு உதயக்குமார். இவர் 'ஜெயசக்தி டிரேடர்ஸ்' என்ற கடை நடத்துகிறார். இவர் சேலத்தில் உள்ள 'மகாலட்சுமி டிரேடர்ஸ்' நிறுவன உரிமையாளர் பொன்னுச்சாமியிடம் அப்பளம், வடகம் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்கி தேனியில் விற்பனை செய்தார். கடந்தாண்டு மாவட்ட நியமன அலுவலர் ராகவன் தலைமையிலான அதிகாரிகள் தேனி ரைஸ் மில் தெருவில் உள்ள அப்பளம், வடகம் விற்பனை செய்யும் கடையில் சோதனை செய்தனர். அப்போது எண்ணெயில் பொறிக்காத அப்பளம், வடகம் மாதிரிகளை சேகரித்தனர். அதனை மண்டல பகுப்பாய்வு மைய ஆய்வுக்காக அனுப்பி ஆய்வு முடிவுகளை பெற்றார். அதில் மனித உடலில் சிறுநீரகம், கல்லீரலை பாதிக்கும் அளவிற்கு வேதிப்பொருள் 'சன்செட் மஞ்சள், சிந்தெடிக் உணவுக்கான வண்ண நிறமிகள் பவுடராக கலக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் சேலத்தில் இயங்கிவந்த மகாலட்சுமி டிரேடர்ஸ் உரிமையாளர் பொன்னுச்சாமி, தேனி ஜெயசக்தி டிரேடர்ஸ் உரிமையாளர் உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு, தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ராகவன் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் காவியா ஆஜரானார். விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி லலிதாராணி, தயாரிப்பாளர் பொன்னுச்சாமி, விற்பனையாளர் உதயக்குமார் இருவரும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். தவறை திருத்தி தொழிலை தொடர ஒரு நாள் முழுவதும் மாஜிஸ்திரேட் நீதிமன்ற கூண்டில் இருக்குமாறு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.