/உள்ளூர் செய்திகள்/தேனி/ போடி காய்ச்சலால் மேலும் 7 மாணவர்கள் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை தீவிரம் போடி காய்ச்சலால் மேலும் 7 மாணவர்கள் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை தீவிரம்
போடி காய்ச்சலால் மேலும் 7 மாணவர்கள் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை தீவிரம்
போடி காய்ச்சலால் மேலும் 7 மாணவர்கள் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை தீவிரம்
போடி காய்ச்சலால் மேலும் 7 மாணவர்கள் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை தீவிரம்
ADDED : ஜூலை 16, 2024 04:55 AM
போடி : போடி அருகே அணைக்கரைப்பட்டியில் மேலும் 7 மாணவர்களுக்கு காய்ச்சல், மற்றும் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போடி அருகே அணைக்கரைப்பட்டியில் அரசு கள்ளர் துவக்கப் பள்ளி, உயர்நிலைப்பள்ளிகள் அங்கன்வாடியில் படிக்கும் 13 பேர் ஒரே நாளில் காய்ச்சல் பாதித்தனர். மீனாட்சிபுரம் சுகாதார துறையினர் ஆய்வு செய்து வைரஸ் காய்ச்சல் பாதித்தவர்களுக்கும், இதில் அகில் 6, அஸ்வின் 5, இருவருக்கு அம்மை பாதிப்பை கண்டறிந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
4 நாட்களுக்கு முன்பு டொம்புச்சேரி வட்டார மருத்துவ அதிகாரி தலைமையில் மருத்துவ முகாம் அமைத்து, நிலவேம்பு கசாயம் வழங்கினர். ஊராட்சி குடிநீர் மேல்நிலைத் தொட்டி குளோரினேசன் செய்யப்பட்டது. ஊராட்சி சுத்திகரித்து குடிநீர் வினியோகிக்கவும், குடிநீரை காய்ச்சி குடிக்க சுகாதாரத் துறையினர் அறிவுருத்தினர். நேற்று திண்டுக்கல் மண்டல பூச்சியியல் துறை வல்லுநர் டாக்டர் விக்டர், மாவட்ட தொற்று நோய் நிபுணர் கார்த்திக், டொம்புச்சேரி வட்டார மருத்துவ அலுவலர் தண்டபாணி, மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகேசன், வட்டார மேற்பார்வையாளர் முருகர் சுகாதார ஆய்வாளர்கள் சிலம்பரசன், வெங்கடேச பெருமாள் ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.
அங்கு உள்ள மாணவர்களுக்கு காய்ச்சல், அம்மை நோய் உள்ளதா என ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. பள்ளிக்கு வராத மாணவர்களின் வீடு தேடி சென்று பார்த்ததில் மேலும் 7 மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தது தெரிந்தது.
இதில் மூன்று பேருக்கு அம்மை நோய் பாதிப்பு இருக்கலாம் என பரிசோதனை மேற்கொண்டனர். டெங்கு காய்ச்சல் எதனால் வருகிறது, காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, குடிநீரை காய்ச்சி குடிக்குமாறு சுகாதார துறையினர் அறிவுறுத்தினர்.