ADDED : ஜூலை 13, 2024 04:21 AM
தேனி : மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில், விவசாயிகள் தங்களது தரிசு நிலங்களை உழுது சிறுதானிய சாகுபடி செய்து பயன்பெறலாம்.
தமிழ்நாடு சிறுதானிய இயக்கத் திட்டத்தின் கீழ் உழவு மானியம் வழங்க 200 எக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தரிசு நில விபரங்கள் ஆதார் நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவற்றுடன் தேனி, உத்தமபாளையம் அலுவலகங்களை அணுகி பயனடையலாம். உழவு பணி முடிந்தவுடன் ஒரு எக்டேருக்கு ரூ.5400 பின்னேற்பு மானியமாக பயனாளியின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.