/உள்ளூர் செய்திகள்/தேனி/ சுருளி அருவியில் யானைகள் கூட்டம் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை சுருளி அருவியில் யானைகள் கூட்டம் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
சுருளி அருவியில் யானைகள் கூட்டம் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
சுருளி அருவியில் யானைகள் கூட்டம் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
சுருளி அருவியில் யானைகள் கூட்டம் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
ADDED : ஜூன் 10, 2024 04:52 AM
கம்பம் : சுருளி அருவி அருகே யானைகள் கூட்டம் தென்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
இந்த அருவியில் குளிக்க தினமும் நூற்றுக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். மேகமலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை வனத்துறையினர் அருவி பகுதிக்குச் சென்ற போது, அங்குள்ள கருப்பசாமி கோயில் அருகில் குட்டிகளுடன் யானை கூட்டம் நின்றுள்ளது.யானை கூட்டத்தை பார்த்த வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க தடை விதித்தனர்.இதுகுறித்து கம்பம் கிழக்கு ரேஞ்சர் பிச்சைமணி கூறுகையில், 'யானைகள் அருவி அருகே முகாமிட்டுள்ளது. வனப்பகுதிக்குள் நகர்ந்து சென்றால் தான் குளிக்க அனுமதி வழங்கப்படும்.', என்றார்.