/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஆடி அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம்: கோயில்களில் திரளான பக்தர்கள் தரிசனம் ஆடி அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம்: கோயில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்
ஆடி அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம்: கோயில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்
ஆடி அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம்: கோயில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்
ஆடி அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம்: கோயில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்

தள்ளு முள்ளு
அருவியில் போதிய அளவு தண்ணீர் விழுந்த போதும், ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டதால் குளிப்பதற்கு அருவி பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார், வனத்துறையினர் வரிசையில் அனுப்பினர். அதேபோன்று உடை மாற்றும் அறைகள் போதிய அளவு இல்லாததால் பெண்கள் அவதிப்பட்டனர்.
வாகனங்கள் நிறுத்துவதில் சிக்கல்
நூற்றுக்கணக்கில் வாகனங்கள் வந்ததால் நிறுத்துவதற்கு இடமில்லை. ரோட்டின் பக்கவாட்டில் சுமார் 2 கி.மீ., தூரத்திற்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அருகில் இருந்த தோட்டங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. வனத்துறையும், சுருளிப்பட்டி ஊராட்சியும் பொது மக்களிடம் வசூலிப்பதில் மட்டுமே குறியாக இருந்தன. எந்தவித வசதியும் செய்து கொடுக்கப்படாததால், பொது மக்கள் புலம்பியபடிச் சென்றனர்.
வனத்துறை சலுகை
நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு அருவியில் குளிப்பதற்கு வனத்துறை கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை ஒரு நாள் மட்டும் ரத்து செய்து, இலவசமாக குளிக்க பொது மக்களுக்கு சலுகை அளித்திருந்தது.