/உள்ளூர் செய்திகள்/தேனி/ செங்கல் காளவாசல் தொழிலாளர்கள் வேலை இழந்து ஏலத்தோட்டங்களுக்கு செல்லும் அவலம் விலையின்றி செங்கல் உற்பத்தி தொழில் நசிவு செங்கல் காளவாசல் தொழிலாளர்கள் வேலை இழந்து ஏலத்தோட்டங்களுக்கு செல்லும் அவலம் விலையின்றி செங்கல் உற்பத்தி தொழில் நசிவு
செங்கல் காளவாசல் தொழிலாளர்கள் வேலை இழந்து ஏலத்தோட்டங்களுக்கு செல்லும் அவலம் விலையின்றி செங்கல் உற்பத்தி தொழில் நசிவு
செங்கல் காளவாசல் தொழிலாளர்கள் வேலை இழந்து ஏலத்தோட்டங்களுக்கு செல்லும் அவலம் விலையின்றி செங்கல் உற்பத்தி தொழில் நசிவு
செங்கல் காளவாசல் தொழிலாளர்கள் வேலை இழந்து ஏலத்தோட்டங்களுக்கு செல்லும் அவலம் விலையின்றி செங்கல் உற்பத்தி தொழில் நசிவு
ADDED : ஜூலை 16, 2024 03:54 AM
கம்பம் : செங்கல் காளவாசல் தொழிலாளர்கள் வேலை இல்லாததால் கேரளா ஏலத்தோட்ட வேலைகளுக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. செங்கலுக்கு விலை கிடைக்காத நிலையில் காளவாசல்கள் மூடப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் தேனி, ஆண்டிபட்டி, கம்பம், பெரியகுளம், போடி, சின்னமனூர் என அனைத்து ஊர்களிலும்
300க்கும் மேற்பட்ட காளவாசல்கள் உள்ளன. இதில் கம்பத்தில் 48 காளவாசல்கள் செயல்பட்டு வந்தது. மூலப் பொருள்கள் தட்டுப்பாடு, விலை உயர்வு, செங்கலுக்கு கட்டுபடியான விலை கிடைக்காதது, தொழிலாளர் கூலி உயர்வு என பல காரணிகளால் காளவாசல்கள் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. முக்கிய காரணமாக விலை குறைவும், செங்கல் பயன்பாடு படிப்படியாக குறைந்தது வருவதால் கம்பத்தில் காளவாசல்களை மூட வேண்டிய நிலை எழுந்தது. இதனால் தற்போது 22 காளவாசங்கள் மட்டுமே செயல்படுகின்றன.
ஆயிரம் செங்கல் ரூ.6 ஆயிரம் முதல் 6500 வரை விலை கிடைத்தால் கட்டுபடியாகும். ஆனால் தற்போது ரூ.5600 கிடைக்கிறது. இந்த விலை கட்டுபடியாகாத நிலையில் விற்பனையும் மந்தமாக உள்ளது. கேரளாவில் இருந்து வரும் ஆர்டர்கள் கிடைக்கவில்லை. அங்கு ஹாலோபிளாக் கற்களை பயன்படுத்த துவங்கி விட்டனர். தமிழகத்திலும் தற்போது மெல்ல, மெல்ல செங்கல் பயன்பாடு குறைந்து வருகிறது. மாற்று கற்கள் பயன்படுத்த துவங்கி விட்டனர்.
இதனால் காளவாசங்களில் பணியாற்றி வந்த 50 சதவீத தொழிலாளர்கள் வேலை கிடைக்காததால், கேரளாவிற்கு ஏலத்தோட்ட வேலைகளுக்கு செல்ல துவங்கி விட்டனர்.
கம்பம் செங்கல் காளவாசல் உரிமையாளர் கிருஷ்ணன் கூறுகையில், செங்கல் விலை கிடைக்கவில்லை. விற்பனையும் குறைந்து விட்டது. மூலப்பொருள்கள் வெளியூர்களிலிருந்து கொண்டு வர வேண்டிய நிலை. வேறு வழியின்றி தொழிலாளர்கள் ஏலத் தோட்ட வேலைகளுக்கு செல்ல துவங்கி உள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் காளவாசல் தொழில் முற்றிலும் முடங்கி விடும் என்றார்.