Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.25.25 லட்சம் மோசடி மயிலாடுதுறை தம்பதி மீது வழக்கு

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.25.25 லட்சம் மோசடி மயிலாடுதுறை தம்பதி மீது வழக்கு

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.25.25 லட்சம் மோசடி மயிலாடுதுறை தம்பதி மீது வழக்கு

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.25.25 லட்சம் மோசடி மயிலாடுதுறை தம்பதி மீது வழக்கு

ADDED : ஆக 03, 2024 10:03 PM


Google News
தேனி,:அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.25.25 லட்சம் மோசடி செய்த மயிலாடுதுறையை சேர்ந்த அரசு ஊழியர்கள் தம்பதி அருண்குமார், அஜந்தா மீது தேனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தேனி ஜவஹர் மெயின் தெரு சண்முகசுந்தரம் மனைவி வெண்ணிலா 50. கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடத்தை சேர்ந்த தம்பதிகளான அருண்குமார், அஜந்தாவை வெண்ணிலாவிடம் அவரது நண்பர் ராஜேஷ் அறிமுகம் செய்து வைத்தார்.

அவர்கள் சென்னை எழிலகத்தில் வருவாய்த்துறையில் பணிபுரிவதாக தெரிவித்தார். எனவே, வெண்ணிலாவின் மகன் பாரத்விஷ்ணு, மகள் சாந்திதேவிக்கு அரசு வேலை வாங்கி தர ரூ.20 லட்சம் செலவாகும் என்றனர். இதனை நம்பிய வெண்ணிலா ரூ.13.25 லட்சத்தை பல்வேறு தவணைகளில் அருண்குமார், அஜந்தா வங்கி கணக்கிற்கு செலுத்தினார்.

வேலை வாங்கி தராததால் வெண்ணிலா பணத்தை திருப்பி கேட்டார். திருப்பி தராமல் ரூ.12 லட்சம், ரூ.15 லட்சம், ரூ.6 லட்சத்திற்கான 3 காசோலைகளை அடுத்தடுத்து வழங்கினர். வங்கி கணக்கில் பணம் இல்லாமல் காசோலைகள் திரும்பின. வெண்ணிலா தேனி எஸ்.பி.,யிடம் புகார் செய்தார். விசாரணையில் பணத்தை திருப்பி தருவதாக தம்பதியினர் கூறினர். ஆனாலும் பணம் வழங்காமல் ஏமாற்றினர். இதே போல் வெண்ணிலா வீட்டருகில் வசிக்கும் ரவி என்பவரது மகன் மதன்குமாருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சத்தை ஏமாற்றினர்.

வெண்ணிலா புகாரில் அருண்குமார், அஜந்தா மீது தேனி போலீசார் மோசடி வழக்கு பதிந்தனர். இருவரும் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us