/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஆடுகள் திருடு போவதை தடுக்க சி.சி.டி.வி., கேமராக்கள் அமைக்க முடிவு ஆடுகள் திருடு போவதை தடுக்க சி.சி.டி.வி., கேமராக்கள் அமைக்க முடிவு
ஆடுகள் திருடு போவதை தடுக்க சி.சி.டி.வி., கேமராக்கள் அமைக்க முடிவு
ஆடுகள் திருடு போவதை தடுக்க சி.சி.டி.வி., கேமராக்கள் அமைக்க முடிவு
ஆடுகள் திருடு போவதை தடுக்க சி.சி.டி.வி., கேமராக்கள் அமைக்க முடிவு
ADDED : ஜூன் 17, 2024 12:09 AM
தேனி : பழனிசெட்டிபட்டி குற்றப்பிரிவு போலீசார் சார்பில், வளையபட்டியில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் சொந்த செலவில் கிராமம் முழுவதும் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்துவதாக கிராமத்தினர் உறுதி தெரிவித்துள்ளனர்.
போடி தாலுகா மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சியில் வளையபட்டி கிராமம் உள்ளது. இங்கு சில நாட்களாக தொடர்ந்து 22 ஆடுகள் திருடு போயின. இதனால் கால்நடைகளை இழந்தவர்கள் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தனர். தொடர் திருட்டை தடுக்கவும், கண்காணிப்பது தொடர்பாக போலீசார் சார்பில் நேற்று அங்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
இன்ஸ்பெக்டர் சிவராம கிருஷ்ணன் தலைமை வகித்தார். கிராமத்தின் தலைவர் சின்னதுரை முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் பேசுகையில், 'கிராமத்திற்கு உள்ளே வரும் பாதைகளில் சி.சி.டி.வி., கேமராக்கள் அமைப்பது நல்லது. இதன் மூலம் யார் கிராமத்திற்குள் நுழைகிறார்கள், வேறு ஏதேனும் பிரச்னைகள் என்றால் கூட கண்காணிக்க இயலும். இதனால் திருட்டு சம்பவங்கள் கட்டுப்படுத்தப்படும். குற்ற சம்பவங்களில் யாரேனும் ஈடுபட்டிருந்தாலும் அவர்களை எளிதில் பிடித்து விடலாம்.', என்றார்.
பின், பொதுமக்கள் சார்பில் கிராமத்தில் 6 இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் அமைக்கிறோம் என தெரிவித்தனர். மேலும், கேமராக்கள் பொருத்துவதற்கு ஆகும் செலவினை பொது மக்கள் ஒன்றிணைந்து, இயன்ற தொகை வழங்க வேண்டும் என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பணிகளை துவக்க பொது மக்கள் சிலர், கிராமத்தின் தலைவர் சின்னதுரையிடம் பணம் வழங்கினர். நிகழ்வில் எஸ்.ஐ., மணிமாறன், சிறப்பு எஸ்.ஐ., ஆறுமுகம் பங்கேற்றனர்.