/உள்ளூர் செய்திகள்/தேனி/ சுரங்கனாறு நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிப்பு சுரங்கனாறு நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிப்பு
சுரங்கனாறு நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிப்பு
சுரங்கனாறு நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிப்பு
சுரங்கனாறு நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : ஜூலை 16, 2024 05:02 AM

கூடலுார் : கேரளாவில் பெய்து வரும் மழையால் தேனி மாவட்டம் கூடலுார் அருகே சுரங்கனாறு நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டம் கூடலுார் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது சுரங்கனாறு நீர்வீழ்ச்சி. கேரளாவில் மழை பெய்யும் போது இங்கு நீர்வரத்து இருக்கும். வனப்பகுதியில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் அங்கு செல்ல அனுமதியில்லை. தொலைவில் இருந்து இதனை காண முடியும்.
கடந்த சில நாட்களாக கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கூடலுார் --- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்கள் இதன் அழகை கண்டு ரசித்தவண்ணம் செல்கின்றனர்.