வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
ADDED : ஜூலை 12, 2024 08:57 PM
ஆண்டிபட்டி:மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்திற்கு ஜூலை 3 ல் தண்ணீர் திறக்கப்பட்டது. துவக்கத்தில் வினாடிக்கு 300 கன அடியாக திறக்கப்பட்ட நீர் அன்றைய தினமே வினாடிக்கு 500 கன அடியாக உயர்த்தப்பட்டது. ஜூலை 5ல் வினாடிக்கு 750 கன அடியாக உயர்த்தப்பட்ட நீர், நேற்று காலை 10:30 மணிக்கு வினாடிக்கு 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி-- சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேறுகிறது. நேற்று காலை அணை நீர்மட்டம் 51.94 அடியாக இருந்தது. அணை உயரம் 71 அடி. நீர்வரத்து வினாடிக்கு 788 கன அடியாக இருந்தது