Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

ADDED : ஜூலை 13, 2024 04:41 AM


Google News
Latest Tamil News
ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்தூரில்செங்கமலத் தாயார், கதலி நரசிங்க பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் 800 ஆண்டுகள் பழமையானது. கோயில்கும்பாபிஷேகத்திற்காக உபயதாரர்கள் மூலம் ரூ.70 லட்சம் மதிப்பில் கோயிலில் கருவறை, கோபுரம், மேல் தளத்தில் தட்டு ஓடு பதித்தல், குளம் சீரமைப்பு, சக்கரத்தாழ்வார் சன்னதி உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.மூன்று நாட்கள் நடந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் யாக சாலை பூஜைகள், ஹோமங்கள், மகா பூர்ணாஹூதி, மகா கும்ப புறப்பாடு நிகழ்ச்சிகளுக்குப் பின் நேற்று காலை 6:25 மணிக்கு கும்பங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம்நடந்தது.நிகழ்ச்சியில் எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன், எம்.எல்.ஏ.,க்கள் மகாராஜன், சரவணகுமார்,ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஏற்பாடுகளை அறநிலையத்துறை செயல் அலுவலர் ஹரிஷ் குமார், தக்கார் வேலுச்சாமி,ஆய்வாளர்கள் கார்த்திகேயன், தனலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி சிவ சக்தி டிரேடர்ஸ் ரவிபிரகாசம், ராமசுப்பு, விக்னேஷ், கணேஷ்குமார்மற்றும் பணியாளர்கள், தன முருகன் நகைமாளிகை உரிமையாளர் பிரபு, ஸ்ரீதேவி சில்க்ஸ் விஸ்வநாதன், எஸ்.பி.டி.,சாரீஸ் சுபபாக்கியம் டெக்ஸ்டைல் சார்பில் சேட்டு, ரங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பெருமாள், வசந்தி டிபன் சென்டர் பாபு, ஜம்புலிப்புத்தூர், எஸ்.எம்.வி., டீ ஸ்டால் மகாரோஷன், எம்.எம்.டைல்ஸ் மகாராஜன், கோயில் பணியாளர்கள் முரளி, ஸ்ரீதர், கோபி,பார்த்த சாரதி, பத்மநாபன், சுந்தரம், பாலு,கே.எம்.சி., குழுமம் இயக்குனர் முத்துகோவிந்தன், அரசு ஒப்பந்ததாரர்கள் சன்னாசி, பாண்டியராஜ், புஷ்பம் புளு மெட்டல்ஸ் ஜெகநாதன், பிரகாஷ் புளுமெட்டல்ஸ் வசந்த், தேனி ப்ளைவுட்ஸ் ராஜசேகர், வெஸ்காட்ஸ் இயக்குனர் பார்த்திபன், விஜயகுமார், கிரீன்விண்டோஸ் ராஜேஷ் கண்ணா, நயினார் ஆயில் மில்கமலக் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.அன்னதானம் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us