/உள்ளூர் செய்திகள்/தேனி/ குமுளி மலைப்பாதையில் மண்சரிவு அபாயம் - மழை தீவிரமடைவதற்கு முன் சீரமைக்கப்படுமா குமுளி மலைப்பாதையில் மண்சரிவு அபாயம் - மழை தீவிரமடைவதற்கு முன் சீரமைக்கப்படுமா
குமுளி மலைப்பாதையில் மண்சரிவு அபாயம் - மழை தீவிரமடைவதற்கு முன் சீரமைக்கப்படுமா
குமுளி மலைப்பாதையில் மண்சரிவு அபாயம் - மழை தீவிரமடைவதற்கு முன் சீரமைக்கப்படுமா
குமுளி மலைப்பாதையில் மண்சரிவு அபாயம் - மழை தீவிரமடைவதற்கு முன் சீரமைக்கப்படுமா
ADDED : ஜூன் 03, 2024 03:49 AM

கூடலுார்: 'தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்கு முன் குமுளி மலைப்பாதையில் சேதமடைந்த தடுப்புச் சுவர், மண்சரிவு ஏற்படும் பகுதிகள் சீரமைக்கப்பட வேண்டும்.' என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., தூர மலைப்பாதை பல ஆபத்தான வளைவுகளைக் கொண்டதாகும். தமிழக கேரள எல்லையில் அமைந்திருப்பதால் வாகனப் போக்குவரத்து அதிகம். தினந்தோறும் கூடலுார், கம்பம் பகுதியில் இருந்து தொழிலாளர்களுடன் நூற்றுக்கணக்கான ஜீப்புகள் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலத் தோட்டங்களுக்கு சென்று திரும்புகின்றன.
மேலும் கேரளாவில் இருந்து காய்கறி வாங்க அதிக அளவில் கேரள மக்கள் இவ்வழியாக வருகின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த இப்பாதையில் 2018ல் பெய்த கன மழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் போக்குவரத்து தடை ஏற்பட்டது. அதன்பின் மண்சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து கற்களால் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டன. மேலும் தடுப்புக் கம்பிகளும் அமைக்கப்பட்டன. இருந்த போதிலும் இன்னும் பல இடங்களில் தடுப்புச் சுவர் முழுவதும் சேதமடைந்து மண் சரிவு ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
இரைச்சல் பாலம், பழைய போலீஸ் சோதனைச் சாவடி, வனத்துறை சோதனைச் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது.
இன்னும் சில தினங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் சூழல் உள்ளது.
அதற்குமுன் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை செய்ய தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் முன் வர வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.