ADDED : ஜூலை 17, 2024 12:17 AM
போடி : போடி நந்தவனம் தெருவைச் சேர்ந்தவர் பிச்சைமணி 47.
இவர் போடி மேற்கு தெருவில் டூவீலரில் வந்துள்ளார். வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் டூவீலரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். பிளாஸ்டிக் பையில் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிந்தது. போடி டவுன் போலீசார் பிச்சைமணியை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.