/உள்ளூர் செய்திகள்/தேனி/ சீரமைத்தும் திருமண மண்டபம், கழிப்பிடங்கள் முடங்கிய அவலம் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் மக்கள் அவதி சீரமைத்தும் திருமண மண்டபம், கழிப்பிடங்கள் முடங்கிய அவலம் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் மக்கள் அவதி
சீரமைத்தும் திருமண மண்டபம், கழிப்பிடங்கள் முடங்கிய அவலம் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் மக்கள் அவதி
சீரமைத்தும் திருமண மண்டபம், கழிப்பிடங்கள் முடங்கிய அவலம் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் மக்கள் அவதி
சீரமைத்தும் திருமண மண்டபம், கழிப்பிடங்கள் முடங்கிய அவலம் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் மக்கள் அவதி

தெருவில் நடக்கும் இறுதி சடங்கு
நாகராஜ், காமயகவுண்டன்பட்டி : தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் பொது மயானத்திற்கு பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். சமுதாய மக்கள் நீர்மாலை எடுக்கும் கட்டடம் சேதமடைந்துள்ளதால் வீதியில் தான் எடுக்க வேண்டி உள்ளது. அவ்வாறு எடுக்கும் போது பிரச்னை ஏற்படுகிறது. ஆண்களுக்கான பொது கழிப்பறைகள் இல்லை. பராமரிப்பு இன்றி பல கழிப்பறைகள் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. சாக்கடைகள் சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.
மயானத்திற்கு பாதை வசதி தேவை
மகாலிங்கம், காமயகவுண்டன்பட்டி : காலனியில் உள்ள ஊரணியை தூர்வாரி மழைநீர் தேங்க நடவடிக்கை வேண்டும். காலனியில் சாலை வசதி, சமுதாய கூடம் அமைக்க வேண்டும். இறந்தவர்களை அடக்கம் செய்ய மயானத்திற்கு செல்ல பாதை வசதி இன்றி சிரமம் ஏற்படுகிறது. பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம் பேரூராட்சி கண்டு கொள்ளவில்லை. பகல் நேரங்களில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.
திட்டங்கள் பயன்பாட்டிற்கு வரும்
இந்த பிரச்னைகள் தொடர்பாக பேரூராட்சி தலைவர் வேல்முருகனிடம் கேட்டதற்கு, ஆடு அடிக்கும் கொட்டிலை பயன்படுத்த வர மறுக்கின்றனர். திருண மண்டபம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். காலனி மயானத்திற்கு பாதை உள்ளது. பராமரிக்க மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. அம்ரூத் திட்டத்தின் கிழ் பகிர்மான குழாய் பதிப்பதால் ரோடுகள் சேதமடைந்துள்ளது. அது சரி செய்யப்படும். கிழக்கு வெளி வீதி கழிப்பறை பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டது. தெரு நாய்களை அடைக்கும் கட்டடம் பராமரிப்பு செய்யப்படும், அங்கன்வாடி வளாகம் ஊராட்சி ஒன்றிய பள்ளியாகும். ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் -