போடி : போடி அருகே சில்லமரத்துப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் தெய்வேந்திரன் 65.
இவர் தனது மனைவி தெய்வமணி 59. உடன் டூவீலரில் மெயின் ரோட்டில் வேகமாக சென்றுள்ளார். குறுக்கே வந்த நாய் மீது டூவீலர் மோதியதில் தெய்வேந்திரன் கீழே விழுந்துள்ளார். பலத்த காயம் அடைந்த நிலையில் போடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். போடி தாலுாகா போலீசார் விசாரிக்கின்றனர்.