Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

ADDED : ஜூலை 17, 2024 12:16 AM


Google News
50 மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது

தேனி : அல்லிநகரம் போலீஸ் எஸ்.ஐ., கண்ணன் தலைமையிலான எஸ்.என்.ஆர்., சந்திப்புமுதல் காந்திநகர் செல்லும் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது கட்டண கழிப்பறை அருகே கம்பம் வடக்குபட்டி குரங்குமாயன் தெரு மனோகரன் 60, சட்டவிரோதமாக ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள 50 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். போலீசார் அவரை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

குடும்பத் தகராறில் மூவர் கைது

தேனி: பழனிசெட்டிபட்டி தெற்கு ஜெகநாதபுரம் காந்தாரி அம்மன் கோயில் தெரு ராஜேஷ்குமார் 35. இவரது மனைவி சிவசங்கரி 31. இருவரும் கருத்து வேறுபாடால் பிரிந்து வசிக்கின்றனர். இதுகுறித்து இருவீட்டாருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கணவன் மனைவி பிரிவிற்கு அதேப்பகுதியில் வசிக்கும் உறவினர்கள் சங்கீதா, சுதாகர், மோகன் என மூவர்தான் காரணம் என கூறி பெற்றோர் கூறிவந்தனர். இந்நிலையில் ஜூலை 14ல் ராஜேஷ்குமாரின் தந்தை, தாயார் தெருவில் நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த சுதாகர், மோகன் தந்தையை தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டினர். இதை தடுக்க வந்த தாயை, சங்கீதா தாக்கி கீழே தள்ளினார். ராஜேஷ்குமார் புகாரில், சங்கீதா, சுகாதர் மோகன் உள்ளிட்ட மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

அமீனாவிற்கு கொலை மிரட்டல்

பெரியகுளம்: கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அமீனா ஜென்சி மாலதி 44. ஆண்டிபட்டி அருகே வைகைபுதூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் 42. வீட்டிற்கு வழக்கு சம்பந்தமாக விசாரணை செய்துள்ளார். இந்நிலையில் ரவிச்சந்திரன், ஜென்ஸி மாலதி அலைபேசியில் வழக்கு விசாரணை சம்பந்தமாக என் வீட்டுக்கு வந்து ஏன் தகவல் தெரிவித்தீர்கள் என அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தார். தென்கரை எஸ்.ஐ., அனுசுயா, ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us