/உள்ளூர் செய்திகள்/தேனி/ கம்பம் டூ நாராயணத்தேவன்பட்டி குளத்து பாதை தார் ரோடாக மாற்ற ஆய்வு கம்பம் டூ நாராயணத்தேவன்பட்டி குளத்து பாதை தார் ரோடாக மாற்ற ஆய்வு
கம்பம் டூ நாராயணத்தேவன்பட்டி குளத்து பாதை தார் ரோடாக மாற்ற ஆய்வு
கம்பம் டூ நாராயணத்தேவன்பட்டி குளத்து பாதை தார் ரோடாக மாற்ற ஆய்வு
கம்பம் டூ நாராயணத்தேவன்பட்டி குளத்து பாதை தார் ரோடாக மாற்ற ஆய்வு
ADDED : ஜூலை 21, 2024 08:15 AM
கம்பம்: கம்பத்தில் இருந்து நாராயணத்தேவன்பட்டிக்கு செல்லும் வீரப்ப நாயக்கன் குளத்து மண் பாதை தார் ரோடாக மாற்ற கம்பம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கம்பத்திலிருந்து நாராயணத்தேவன்பட்டிக்கு காமயகவுண்டன்பட்டி வழியாகவும் அல்லது சுருளிப்பட்டி வழியாகவும் செல்ல வேண்டும். மொத்த தூரம் 6 கி.மீ. உள்ளது. இதை தவிர்க்க கம்பத்திலிருந்து வீரப்ப நாயக்கன் குளம் வழியாக செல்ல கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் மண் ரோடு அமைக்கப்பட்டது. இந்த பாதையில் சென்றால் 4 கி.மீ. பயணம் குறையும் . எனவே நாராயணத்தேவன்பட்டி மக்கள் பலரும் இந்த குளத்து ரோட்டை பயன்படுத்தி வந்தனர். இந்த மண் ரோடு 2 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை அகலம் உள்ளது. எனவே ரோட்டை அகலப்படுத்தி, தார் ரோடாக மாற்ற பொதுமக்களும், விவசாயிகளும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். நெல் வயல்களுக்கு இடையே மண் ரோடு உள்ளது.
எம்.பி. தங்க தமிழ்செல்வன் இந்த பாதையை அகலப்படுத்தி தார் ரோடா க மாற்ற கம்பம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை வலியுறுத்தினார். அதற்கான நிதியை தான் அரசிடம் இருந்து பெற்றுத் தருவதாக கூறினார்.
எம்.பி. யின் அறிவுறுத்தலை தொடர்ந்து கம்பம் ஒன்றிய பி.டி.ஒ.க்கள் கனி, மாணிக்கம், பொறியாளர் பாண்டிசெல்வி உள்ளிட்ட அதிகாரிகள் குழு நேற்று ரோட்டை அளவீடு செய்தனர். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுகிறது. நாராயணத்தேவன்பட்டி தங்க தமிழ்செல்வன் எம்.பி.யின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.