/உள்ளூர் செய்திகள்/தேனி/ வேம்பு, புங்கை மரங்களால் கவனத்தை ஈர்க்கும் போடி சுப்புராஜ் நகர் வேம்பு, புங்கை மரங்களால் கவனத்தை ஈர்க்கும் போடி சுப்புராஜ் நகர்
வேம்பு, புங்கை மரங்களால் கவனத்தை ஈர்க்கும் போடி சுப்புராஜ் நகர்
வேம்பு, புங்கை மரங்களால் கவனத்தை ஈர்க்கும் போடி சுப்புராஜ் நகர்
வேம்பு, புங்கை மரங்களால் கவனத்தை ஈர்க்கும் போடி சுப்புராஜ் நகர்

நிழல் தரும் மரங்கள்
அசோக்குமார், சுப்புராஜ் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், போடி: எங்கள் பகுதியில் உள்ள வீடுகளில் மரங்கள், மாடித்தோட்டம் வளர்பதற்கான ஆசையை மக்களுக்கு 'தினமலர்' நாளிதழ் தூண்டி விடுகிறது. சுத்தமான காற்று,சுகாதாரமான உணவு, துர்நாற்றம் இல்லாத நீரோடைகள் இருந்தாலே நாம் நீண்ட நாட்கள்வாழ்வதற்கு வழிவகுக்கும். இயற்கை சுவாச காற்று தரக்கூடிய முதல் படியாக மரங்கள் இருந்தாலே நோய்களில் இருந்து தப்பித்து சுகாதாரமான வாழ்க்கையை வாழலாம்.
வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்பது அவசியம்
ரவீந்திரன், சமூக ஆர்வலர், போடி: வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மனிதனுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுகிறது. ஒரு மரத்தை வெட்டினால் பத்து மரங்களை யாவது நட வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகள் மரங்களை வெட்டுவோர் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வகையில் எனது வீட்டில் மூங்கில் மரங்களும், வீட்டின் முன்பாக ரோட்டின் இருபுறங்களிலும் வேம்பு, புங்கை மரங்கன்றுகள் நட்டு பராமரிப்பதால் மனதிற்கு சந்தோசம் கிடைக்கிறது.