/உள்ளூர் செய்திகள்/தேனி/ வெளியூர் சென்ற வாலிபர் மாயம் போலீசார் விசாரணை வெளியூர் சென்ற வாலிபர் மாயம் போலீசார் விசாரணை
வெளியூர் சென்ற வாலிபர் மாயம் போலீசார் விசாரணை
வெளியூர் சென்ற வாலிபர் மாயம் போலீசார் விசாரணை
வெளியூர் சென்ற வாலிபர் மாயம் போலீசார் விசாரணை
ADDED : ஜூன் 10, 2024 04:51 AM
கடமலைக்குண்டு : -மயிலாடும்பாறையைச் சேர்ந்தவர் ரேவதி 42.
கணவரை இழந்தவர். இவரது மகன் சீனு 20. கோவையில் பிளஸ் 2 படித்தார். போதை பழக்கத்தில் பாதிப்படைந்த இவர் தனியார் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் உத்தமபாளையம் தனியார் கல்லுாரியில் சேர்ந்தார். கல்லுாரி பிடிக்கவில்லை என்று வீட்டில் இருந்தவர் கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். மறுபடியும் தனியார் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அடிக்கடி தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். மே 10ல் யாரிடம் சொல்லாமல் வீட்டை விட்டு சென்றார். மே 18 வரை போன் மூலம் தொடர்பில் இருந்துள்ளார். பெங்களூரூ செல்வதாகவும் தன்னை தேட வேண்டாம் என்றும் சொல்லி உள்ளார். இதன் பின் சீனு தனது தாயிடம் தொடர்பு கொள்ளவில்லை. காணாமல் போனவர் வீட்டுக்கு வந்து விடுவார் என்ற நம்பிக்கையில் இருந்த தாய், மகன் வராததால் இதுகுறித்து மயிலாடும்பாறை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.