ADDED : ஜூலை 15, 2024 04:27 AM

மூணாறு, : அடிமாலி அருகே கல்லார் பிச்சாடு, கைனகிரி பகுதியில் ஏலத்தோட்டத்தில் மரம் முறிந்து விழுந்து பெண் தொழிலாளி பலியானார்.
இடுக்கி மாவட்டம் மாங்குளம் மாமல்ல கண்டம் எளம்பிளாசேரி மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தா 65. இவர், கல்லார் பீச்சாடு அருகே கைனகிரியில் தனியார் ஏலத்தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையில் உலர்ந்த மரம் முறிந்து சாந்தா மீது விழுந்தது. அதில் பலத்த காயமடைந்தவரை சக தொழிலாளர்கள் அடிமாலி தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியில் இறந்தார்.