/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஜி.எஸ்.டி, வரி ஒரே மாதிரியாக விதிக்க வர்த்தக சங்கம் தீர்மானம் ஜி.எஸ்.டி, வரி ஒரே மாதிரியாக விதிக்க வர்த்தக சங்கம் தீர்மானம்
ஜி.எஸ்.டி, வரி ஒரே மாதிரியாக விதிக்க வர்த்தக சங்கம் தீர்மானம்
ஜி.எஸ்.டி, வரி ஒரே மாதிரியாக விதிக்க வர்த்தக சங்கம் தீர்மானம்
ஜி.எஸ்.டி, வரி ஒரே மாதிரியாக விதிக்க வர்த்தக சங்கம் தீர்மானம்
ADDED : ஜூன் 29, 2024 04:39 AM
கம்பம் : ஜி.எஸ்.டி. வரியை ஒரே மாதிரியாக நிர்ணயம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தி கம்பம் வர்த்தக சங்க செயற்குழு, நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கம்பம் வர்த்தக சங்க செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட வர்த்தக பேரமைப்பு தலைவர் செல்வக்குமார் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் சதக்கத்துல்லா முன்னிலை வகித்தார். கம்பம் வர்த்தத சங்க தலைவர் முருகன், செயலாளர் ஜாகிர் உசேன் பொருளாளர் கார்த்திகேயன் வரவேற்றனர்.
கூட்டத்தில் மத்திய அரசு ஒவ்வொரு பொருளுக்கும் வெவ்வேறு சதவீத ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது. இது வர்த்தகர்களுக்கு சிரமமாக உள்ளது. எனவே ஒரே மாதிரியாக வரி விதிப்பு செய்திட மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் கவுரவ தலைவர் ஷாகுல் ஹமீது மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.