/உள்ளூர் செய்திகள்/தேனி/18ம் கால்வாய் தொட்டிப்பாலத்தில் 2வது முறையாக உடைந்து வீணான தண்ணீர்18ம் கால்வாய் தொட்டிப்பாலத்தில் 2வது முறையாக உடைந்து வீணான தண்ணீர்
18ம் கால்வாய் தொட்டிப்பாலத்தில் 2வது முறையாக உடைந்து வீணான தண்ணீர்
18ம் கால்வாய் தொட்டிப்பாலத்தில் 2வது முறையாக உடைந்து வீணான தண்ணீர்
18ம் கால்வாய் தொட்டிப்பாலத்தில் 2வது முறையாக உடைந்து வீணான தண்ணீர்
ADDED : பிப் 11, 2024 01:48 AM

கூடலுார்: கூடலுார் அருகே 18ம் கால்வாய் தொட்டிப் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது.
லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றில் துவங்கி கூடலுார், கம்பம், உத்தமபாளையம், பண்ணைபுரம், கோம்பை, தேவாரம் வழியாகபோடி வரை செல்லும் 47 கி.மீ., தூர 18ம் கால்வாய் திட்டம் மூலம் 6500 ஏக்கர் நிலங்கள் நேரடி பாசன வசதி பெறுகிறது.
இது தவிர 43 கண்மாய்கள் நிரம்புவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மறைமுக பாசனம் அதிகரிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் கால்வாயில் அக்டோபரில் தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் அணையில் நீர் இருப்பு அதிகமாக இருந்தும் தாமதமாக 2023 டிச.19ல் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர் கோம்பையை கடந்து செல்வதற்குள் டிச.31 ல் லோயர்கேம்ப் அருகே கரைப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. அப்போது உடனடியாக தண்ணீர் நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணிகள் முடிந்து ஜன. 8ல் மீண்டும் திறக்கப்பட்டது. தம்மணம்பட்டி அருகே உள்ள தொட்டிப் பாலத்தில் கரைப்பகுதி பலவீனமாக இருப்பதாக அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்பகுதியில் மணல் மூடைகள் அடுக்கி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. மேலும் தொட்டி பாலத்தில் மக்கள் குளிக்க அனுமதிக்க கூடாது என நீர்வளத் துறையினர் போலீசில் புகார் செய்தனர். இருந்த போதிலும் ஆபத்தை உணராமல் அவ்வப்போது குளிப்பது தொடர்ந்தது.
இந்நிலையில் நேற்று திடீரென தொட்டி பாலம் கரைப்பகுதி உடைந்து தண்ணீர் முழுவதும் வீணாக வெளியேறியது. உடனடியாக நீர்வளத்துறைத் அதிகாரிகள் 18 கால்வாய் தண்ணீரை நிறுத்தினர்.
இரண்டாவது முறையாக கரைப்பகுதி உடைந்ததால் விவசாயிகள் புலம்பினர். கரைப்பகுதி விரைவாக சீரமைக்கப்பட்டு மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.