/உள்ளூர் செய்திகள்/தேனி/ காரில் விழுந்து தற்கொலைக்கு முயன்றவருக்கு அறிவுரை காரில் விழுந்து தற்கொலைக்கு முயன்றவருக்கு அறிவுரை
காரில் விழுந்து தற்கொலைக்கு முயன்றவருக்கு அறிவுரை
காரில் விழுந்து தற்கொலைக்கு முயன்றவருக்கு அறிவுரை
காரில் விழுந்து தற்கொலைக்கு முயன்றவருக்கு அறிவுரை
ADDED : ஜூன் 21, 2025 12:44 AM
தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே தண்ணீர் பந்தல் பகுதியில் குடும்ப பிரச்னைக்காக ஆடையின்றி, காரில் விழுந்து தற்கொலைக்கு முயன்றவரை காப்பற்றி அறிவுரை வழங்கினர்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பணையைச் சேர்ந்தவர் ஷியாம் குமார் 35. பழநி முருகன் கோயிலுக்கு சென்று விட்டு காரில் ஊருக்கு திரும்பினார். சில்வார்பட்டி பிரிவு அருகே மர்மநபர் ஆடையின்றி காரை மறித்தார். ஷியாம்குமார் பிரேக் பிடித்ததில் கார் பக்கவாட்டு கண்ணாடி உடைந்தது. ஷியாம்குமார் மர்மநபரிடம் விசாரிக்கையில், 'திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி, மங்கலக்கொம்பைச் சேர்ந்த சிட்டிபாபு 62, என தெரிந்தது. குடும்ப பிரச்னைக்காக காரில் விழுந்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். ஷியாம் குமார், சிட்டிபாபுக்கு அறிவுரை வழங்கினார். போலீசார் சிட்டிபாபுவை மருத்துவமனையில் அனுமதித்து விசாரித்து வருகின்றனர்.-