ஆக்கிரமிப்பு கடை கையகப்படுத்தப்பட்டது
ஆக்கிரமிப்பு கடை கையகப்படுத்தப்பட்டது
ஆக்கிரமிப்பு கடை கையகப்படுத்தப்பட்டது
ADDED : ஜன 24, 2024 05:18 AM

மூணாறு, : மூணாறு நகரில் நடையார் ரோட்டில் ஓடையை ஆக்கிரமித்து அதன் மீது விதிமீறி கடை வைக்கப்பட்டது. அதனை அகற்ற சமீபத்தில் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி கடையை அகற்றுமாறு இடுக்கி கலெக்டர் ஷீபா ஜார்ஜ் வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார். தேவிகுளம் சிறப்பு தாசில்தார் லதீஷ்குமார் தலைமையில் மூணாறு வி.ஏ.ஓ., செல்வி உள்பட வருவாய்துறையினர் போலீசார், நிலம் பாதுகாப்பு படை ஆகியோரின் உதவியுடன் ஆக்கிரமிப்பை அகற்றும் பணிக்கு முன்னேற்பாடாக நேற்று கடையை கையகப்படுத்தி சீல் வைத்ததுடன் அரசுக்குச் சொந்தமான கட்டடம் என நோட்டீஸ் ஒட்டினர்.


