Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ கனமழையால் சாய்ந்த நெற்கதிர்கள் வேளாண் துறை ஆலோசனை

கனமழையால் சாய்ந்த நெற்கதிர்கள் வேளாண் துறை ஆலோசனை

கனமழையால் சாய்ந்த நெற்கதிர்கள் வேளாண் துறை ஆலோசனை

கனமழையால் சாய்ந்த நெற்கதிர்கள் வேளாண் துறை ஆலோசனை

ADDED : அக் 12, 2025 04:57 AM


Google News
Latest Tamil News
கூடலுார் : கூடலுார் பகுதியில் கன மழையால் நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனைத் தவிர்க்க வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

கூடலுார் ஒழுகுபுளி, குள்ளப்பகவுண்டன்பட்டி, சட்ரஸ், வெட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 2500 ஏக்கர் பரப்பளவில் முதல் போக நெல் சாகுபடி நடந்து வருகின்றன.

தற்போது கதிர் விட்டு நெற்பயிர்கள் நன்கு வளர்ந்துள்ளன. இன்னும் சில நாட்களில் அறுவடை செய்யும் பக்குவத்தில் உள்ளது.

கடந்த மூன்று நாட்களாக கூடலுார் பகுதியில் தொடர்ந்து மாலையில் கனமழை பெய்து வருகிறது. இதில் ஒழுகுபுளி, குள்ளப்பகவுண்டன்பட்டி பகுதிகளில் ஏராளமான நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன. இது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

வேளாண்துறையினர் கூறியதாவது: தற்போது வேளாண்துறை பரிந்துரை செய்த ஆர்.என்ஆர்., ரகம் அதிகம் பயிரிட்டுள்ளனர்.

இது தவிர ஒரு சில விவசாயிகள் தனியாரின் வீரிய ஒட்டு ரகமான 509 ரக நெல்லையும் பயிரிட்டுள்ளனர்.

தற்போது பலத்த மழை காரணமாக வயலில் தண்ணீர் நிற்பதால் 509 ரக நெற்பயிர்கள் தண்டுப்பகுதி பலமின்றி அதிகமாக சாய்ந்துள்ளது.

நடவு செய்து அறுபதாவது நாளில் யூரியாவை குறைத்து பொட்டாஷ் உரம் அதிகமிட வேண்டும்.

இவ்வாறு செய்வதால் தண்டு பலமடைந்து பலத்த மழையிலும் சாய்வது குறையும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us