ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே எரதிமக்காள்பட்டி ஸ்ரீ பாலாஜி நர்சரி பிரைமரி பள்ளி ஆண்டு விழா நடந்தது. சங்க தலைவர் லட்சுமிவாசன் தலைமை வகித்தார்.
பெற்றோர் ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். விழாவை வாழ்த்தி ஒக்கரைப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில், எஸ்.ஐ., பாண்டியம்மாள், தலைமை ஆசிரியர் (ஓய்வு) சுப்புராஜ் உட்பட பலர் பேசினர். விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.