ADDED : டிச 05, 2025 05:44 AM
தேனி: தேனியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இம்மாத இறுதியில் தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் புத்தக திருவிழா நடத்தப்பட உள்ளது.
மைதானத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் ஆய்வு செய்தார். டி.ஆர்.ஓ., ராஜகுமார், டி.எஸ்.பி., முத்துக்குமார், தாசில்தார் சதிஷ்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார், தீயணைப்பு , மீட்புத்துறை உதவி அலுவலர் குமரேசன், நகராட்சி கமிஷனர் பார்கவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


