மாணவியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
மாணவியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
மாணவியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
ADDED : அக் 02, 2025 11:58 PM
பெரியகுளம்; பெரியகுளம் அருகே தாமரைக்குளம் அகிலன் தெருவைச் சேர்ந்த சாமிராஜ் மகள் ரம்யாதேவி 24. திண்டுக்கல் தனியார் பொறியியல் கல்லூரியில், முதுகலை பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இவரது பெற்றோருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் 40, இவரது மகன் தவப்பாண்டி 25,மனைவி சத்யா 40, உறவினர் ஜீவா 23, ஆகியோருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந் நிலையில் பெற்றோர்களை அவதூறாக பேசிய நான்கு பேரை ரம்யா தேவி கண்டித்துள்ளார். இதனால் அந்த நான்கு பேரும் ரம்யாவை அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். தென்கரை போலீசார் ஈஸ்வரன் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


