/உள்ளூர் செய்திகள்/தேனி/ கட்டுமானப் பணியால் அரசு ஆரம்ப சுகாதார நி லையத் தில் பிரசவம் நிறுத்தம் கட்டுமானப் பணியால் அரசு ஆரம்ப சுகாதார நி லையத் தில் பிரசவம் நிறுத்தம்
கட்டுமானப் பணியால் அரசு ஆரம்ப சுகாதார நி லையத் தில் பிரசவம் நிறுத்தம்
கட்டுமானப் பணியால் அரசு ஆரம்ப சுகாதார நி லையத் தில் பிரசவம் நிறுத்தம்
கட்டுமானப் பணியால் அரசு ஆரம்ப சுகாதார நி லையத் தில் பிரசவம் நிறுத்தம்
ADDED : செப் 25, 2025 04:43 AM

பெரியகுளம் : பெரியகுளம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டுமானப்பணி துவங்கியதால் பிரசவம் நிறுத்தப்பட்டது.
பெரியகுளம் வடுகபட்டி ரோட்டில் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. ஒரு டாக்டர், 7 நர்ஸ்கள் உள்ளனர்.
நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டில் இருந்து தினமும் ஏராளமான கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்தி கொள்வது, பள்ளி மாணவர்களுக்கு பரிசோதனை, சர்க்கரை, ரத்தக்கொதிப்பு உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாதத்திற்கு 10 முதல் 15 சுகப்பிரசவங்கள் நடந்தது.
கட்டடம் இடிப்பு: ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த பழைய பிரசவ வார்டு கட்டடம் இடிக்கப்பட்டு நகராட்சி 15 வது நிதிக்குழு மானியம் திட்டத்தில் ரூ.1.50 கோடி புதிய கட்டடம் கட்டுமானப்பணி துவங்க உள்ளது. இதனால் இங்கு பரிசோதனை கர்ப்பிணிகள் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு சிபாரிசு செய்யப்படுகிறது.
புதிதாக கட்டப்பட உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நவீன ஆப்பரேஷன் தியேட்டர் கட்டுவதற்கும், பணி முடிந்த பிறகு நவீன உபகரணங்கள் வாங்குவதற்கு நகராட்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.