/உள்ளூர் செய்திகள்/தேனி/ க.மயிலாடும்பாறை ஒன்றியத்தில் ரூ.2 கோடியில் வளர்ச்சிப்பணிகள் 'போக்கஸ் பிளாக்' திட்டத்தில் மேற்கொள்ள முடிவு க.மயிலாடும்பாறை ஒன்றியத்தில் ரூ.2 கோடியில் வளர்ச்சிப்பணிகள் 'போக்கஸ் பிளாக்' திட்டத்தில் மேற்கொள்ள முடிவு
க.மயிலாடும்பாறை ஒன்றியத்தில் ரூ.2 கோடியில் வளர்ச்சிப்பணிகள் 'போக்கஸ் பிளாக்' திட்டத்தில் மேற்கொள்ள முடிவு
க.மயிலாடும்பாறை ஒன்றியத்தில் ரூ.2 கோடியில் வளர்ச்சிப்பணிகள் 'போக்கஸ் பிளாக்' திட்டத்தில் மேற்கொள்ள முடிவு
க.மயிலாடும்பாறை ஒன்றியத்தில் ரூ.2 கோடியில் வளர்ச்சிப்பணிகள் 'போக்கஸ் பிளாக்' திட்டத்தில் மேற்கொள்ள முடிவு
ADDED : செப் 24, 2025 08:28 AM
தேனி : கடமலை மயிலாடும்பாறை வட்டாரத்தில் 'போக்கஸ் பிளாக்' திட்டத்தில் ரூ.2 கோடியில் வளர்ச்சி பணிகள் நடத்த உள்ளதாகவும், அதற்காக கலெக்டர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் கல்வி, அடிப்படை வசதிகளில் பின்தங்கிய, மலைப்பகுதிகளில் உள்ள 50 வட்டாரங்கள் கடந்தாண்டு தேர்வு செய்யப்பட்டன. இந்த வட்டாரங்களை மேம்படுத்த போக்கஸ் பிளாக்' திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி 3 ஆண்டுகளில் ரூ. 5 கோடியில் இந்த வட்டாரங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டது. மாவட்டத்தில் கடமலை மயிலாடும் பாறை ஒன்றியம் இத்திட்டத்தில் தேர்வானது. ஒன்றியத்தை மேம்படுத்தும் வளர்ச்சி பணி கடந்தாண்டு துவங்கியது. இத்திட்டத்திற்காக இந்தாண்டு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி அதிகாரிகள் கூறியதாவது: கலெக்டர் தலைமையில் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தது. அதில் மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாக மாற்றம் செய்வது.
கண்டமனுாரில் குடிநீர் பிரச்னை தீர்க்க புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைப்பது. சேதமடைந்த அங்கன்வாடி மையங்கள் சீரமைத்தல், அரசுப்பள்ளிகளில் 10, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள், அங்கன்வாடிக்கு வருகை தரும் குழந்தைகளில் ஊட்டசத்து குறைபாடான குழந்தைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து வழங்குதல், கால்நடை முகாம்கள், பயிர்சாகுபடி தொழில்நுட்பங்கள் தொடர்பான விழிப்புணர்வு வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது என்றனர்.