Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ உள்ளாட்சியில் போட்டியிட்டவர்களுக்கு 'டிபாசிட்' திரும்ப வழங்காமல் இழுத்தடிப்பு

உள்ளாட்சியில் போட்டியிட்டவர்களுக்கு 'டிபாசிட்' திரும்ப வழங்காமல் இழுத்தடிப்பு

உள்ளாட்சியில் போட்டியிட்டவர்களுக்கு 'டிபாசிட்' திரும்ப வழங்காமல் இழுத்தடிப்பு

உள்ளாட்சியில் போட்டியிட்டவர்களுக்கு 'டிபாசிட்' திரும்ப வழங்காமல் இழுத்தடிப்பு

ADDED : செப் 25, 2025 04:41 AM


Google News
தேனி : தேனி மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான டிபாசிட் செலுத்திய வேட்பாளர்களுக்கு பணத்தை திருப்பிவழங்காமல் இழுத்தடிப்பதால் போட்டியிட்டவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

மாவட்டத்தில் 22 பேரூராட்சிகள் உள்ளன. 6 நகராட்சிகள் உள்ளன. இதில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பேரூராட்சியில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு டிபாசிட் ரூ.500 எனவும்,இதே பிரிவினர் நகராட்சிகவுன்சிலர் பதவிக்கு ரூ.1000 செலுத்த வேண்டும். இதர பிரிவினர் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு ரூ.2 ஆயிரம் டிபாசிட் செலுத்த வேண்டும்என மாநில தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியது. அதன்படி 6 நகராட்சிகளில் 177 கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களுக்கானடிபாசிட் தொகையை செலுத்தினர். தேர்தலில் பதிவான மொத்த ஒட்டுக்களில் 6ல் ஒரு பங்கு ஓட்டுக்களை கூட பெறாத வேட்பாளர்கள் தாங்கள் செலுத்திய டிபாசிட் தொகையை இழக்க நேரிடும். அவர்களை தவிர வெற்றி பெற்றவர்கள், 6ல் ஒரு பங்கை விட கூடுதல் ஓட்டுக்களை பெற்று தோல்வியைதழுவியவர்கள் செலுத்திய டிபாசிட்டுகளை மீண்டும் வழங்கக்கோரி விண்ணப்பித்து திரும்பி பெற முடியும். ஆனால் பெரும்பாலானகவுன்சிலர்கள் இதுகுறித்து கண்டு கொள்ளவில்லை. மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் நகராட்சிகளில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் 23 பேரும், டெபாசிட் பெற தகுதி பெற்றவர்கள் இத்தொகை திரும்ப வழங்க மனு அளித்தும், வழங்காமல் இழுத்தடிப்பதாக புலம்புகின்றனர். நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், முறையாக விண்ணப்பிக்காமல் டிபாசிட் தொகையை திரும்ப வழங்க இயலாது.தேவைப்படுவோர் விண்ணப்பிக்கலாம். என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us